வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா? பெரும்பாண்மையான கமல் ரசிகற்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட வெற்றிகரமான பட வரிசையில் இந்தப்படமும் ஒன்று என்ற போதும், இது ஒரு சராசரி மசாலா வெற்றியல்ல என்பதே எனது எண்ணம்... கமலின் நடிப்பிலோ கடமை உணர்ச்சியிலோ எந்த குறையும் மிகையும் கூறாவிடிலும், இந்தப்படத்தின் வெற்றிக்கு அவை மட்டுமே காரணமாக கூற முடியாது என்று கொளலாம். ஏனெனில் -இந்தப் படத்தின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்த கமல் கையாண்ட வியாபார உத்திகளும் வெகுஜன ஊடகங்களின் விளம்பர திறமைகளும் பெரும்பங்களித்ததை மறுக்கமுடியாது. மொத்தத்தில் இந்தப்படத்தின் வெற்றி சற்றே கவலை அளிக்கிறது! திரு ஞாநி அவர்களின் இத்திரைப்பட விமர்சனத்தை ( அவரது ஓ பக்கங்களில் ) முழுவதுமாக ஒப்புக்கொள்ளாவிடிலும், அதில் அவர் கூறியுள்ள அடிப்படை யதார்த்தத்தை கருத்தில் கொள்ளவேண்டும். மாபெரும் விளம்பர வியூகங்களினால், இத்திரைப்படம் முன்வைத்த கருத்து அநேக தமிழ் மக்களை சென்றடைந்திருக்கும். இந்த கருத்தின் பாதிப்பை சமூக அக்கறையுள்ள எவரும் அறியாமல் இருப்பர் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமே! அது ஏனோ தெரியவில்லை சமூக அக்கறையும் வியாபாரமும் பெரும்பாலும் முரண்தொடை...