ஜெயமோகன் அவர்களின் 'காந்தியும் இந்தியும்' கட்டுரைக்கு எனது தத்து பித்து பின்னூட்டும் அதற்கு அவருடைய மதிப்பார்ந்த பதில்களும் ( பொருமையாக, எனது பின்னூட்டத்திற்கு பதிலளித்ததற்கு அவருக்கு மிக்க நன்றி) http://jeyamohan.in/?p=4087 எனது மின்னஞ்சல்- தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் காந்தி அடைந்த நடைமுறை விவேகத்தால் தான் இந்தியை முன்மொழிந்தார் என்றே வைத்துக்கொள்வோம் . எனது சொந்த ஊர் பழனியின் அருகே உள்ள பாலசமுத்திரத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்தியைக் கற்றுக்கொள்வதற்கும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறது ? காந்தியின் நடைமுறை விவேகம் வட இந்தியர்களுக்கும் தேவநாகிரி பரிச்சயமான பகுதிகளுக்கும் வேண்டுமானால் எளிதாக இருந்திருக்கலாம் . நீங்கள் சொல்வது போல் கணிப்பொறியின் உதவியால் கனநேரத்தில் தமிழில் வாசிக்க முடியும் காலத்தில் இணைப்பு மொழி தேவை இல்லை தான் . ஆனால் இந்த கணிப்பொறியும் நவீனமும் எதனால் முடிந்தது ? இன்றைய கணிப்பொறிஉலகில் தமிழர்கள் அடைந்த முன்னேற்றம் ( மொழியாக்க மென்பொருள் உட்பட ) எதனால்...